shrx
  [email protected]      +91 7010252049

மாதம் மும்மாரி பொழிகிறதா?

மாதம் மும்மாரி பொழிகிறதா?

மாதம் மும்மாரி பொழிகிறதா?

* மழைக்காலங்களில் ஏற்படக் கூடிய காய்ச்சலுக்கு உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனைக்கு சென்று சாதாரண காய்ச்சல்தானா அல்லது டெங்கு  போன்ற வைரஸ் காய்ச்சலா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். அலட்சியமோ, தாமதமோ செய்யாமல் சிகிச்சை பெறுவதும் அவசியம்.

* மழை காலங்களில் ஜீரண கோளாறு ஏற்படும். அதனால் அசைவ பிரியர்கள் குறைந்த அளவு அசைவ உணவு எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் அவர்கள் அசைவ உணவுகளை ஹோட்டல்களில் சாப்பிடாமல் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது முக்கியம்.  குறிப்பாக மழைக் காலங்களில்  மசாலா உணவுகளையும், உப்பு கூடிய உணவுகளையும் தவிர்த்துவிடுவது நல்லது.

* நீங்கள் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை வீட்டிலோ வீட்டை சுற்றியோ தேங்க விடாதீர்கள். வீட்டின் அறைகளை அடைத்து  மூடி வைக்காமல்  அறைக்கு வெளிச்சமும் காற்றோட்டமும் படும்படி வையுங்கள்.

* மழைக்காலங்களில் வெதுவெதுப்பான நீரில் அனைவரும் குளிப்பது நல்லது. குறிப்பாக  குழந்தைகளும், முதியவர்களும் குளிக்கும் தண்ணீரை லேசாக சூடு செய்து குளிக்க வேண்டும்.  கொசு சார்ந்த பாதுகாப்பு  நடவடிக்கைகள் ஒவ்வொரு வீட்டிலும் அவசியம்.

* மழைக்காலங்களில் கிராமங்களில் வசிப்பவர்களை விட நகரங்களில் வசிப்பவர்களை எளிதில் நோய்கள் தாக்கிவிடுகின்றன. அதற்கு சுற்றுப் புறச்சூழல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.  அதனால் நகரத்தில் வாழ்பவர்கள் வசிப்பிடம், குடி தண்ணீர், உணவு போன்றவற்றில் மிகுந்த கவனத்துடன் கையாள்வது அவசியம்.

* சிலர் மழைக்காலங்களில் அடிக்கடி ஆவி பிடிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பார்கள். அவர்கள் அதற்கு முன் மருத்துவரை ஆலோசித்து விட்டு அவரின் அறிவுறுத்தலின்படி நடந்துகொள்ள வேண்டும்.

* சைனஸ், ஆஸ்துமா முதலான தொந்தரவுகள் உள்ளவர்கள், மருத்துவர் ஆலோசனைப் படி அவர்களுடைய உணவு, நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

* மழைக்காலங்களில் உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டியதில்லை. உடற்பயிற்சியினை இந்த காலக்கட்டத்திலும் மேற்கொள்ளும்போது உடல் நன்றாக வியர்க்கும். இதனால் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

* குளிரைத் தாங்க கூடிய ஆடைகளை அணிவது நல்லது. குழந்தைகள் ஆடை தரையில் படும்படி இருக்கக் கூடாது. அது தேவையற்ற தொற்றுகளை உண்டாக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. முதியவர்கள் கனமான ஆடைகளை அணிவது நல்லது.  மழைக்காலங்களில் துணிகளை நன்றாக  துவைத்து உலர்த்தி அயர்ன் செய்து உடுத்திக் கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு உணவு,  ஃபாஸ்ட் ஃபுட் இவைகளை கண்டிப்பாக தவிர்த்தாக வேண்டும்.  இதனால் வயிற்றில் எளிதில் கிருமித்தொற்று ஏற்படும்.

* மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் வரும். அந்த கவலை வேண்டியதில்லை. வைட்டமின் சி நிறைந்த பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். கொய்யா, மாதுளை, பப்பாளி, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு  முதலானவற்றில் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச்  செய்யும். இதேபோல் தினமும் ஒரு கீரை எடுத்துக்கொள்வது நல்லது. முருங்கைக்கீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை போன்ற கீரைகளை அன்றாடம் மதிய உணவில் எடுத்துக் கொள்ளலாம்.  உணவில் கசப்பு, துவர்ப்பு சுவை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

Read this on மருத்துவம் Ad1
  Contact Us
  Mumin Media.

Chennai, Tamilnadu, India

Tel : +91 7010252049
Mail : [email protected]
Business Hours : 9:30 - 5:30

  Follow Us
Site Map
Get Site Map
  About

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Excepturi, dolores, quibusdam architecto voluptatem amet fugiat nesciunt placeat provident cumque accusamus itaque voluptate modi quidem dolore optio velit hic iusto vero praesentium repellat commodi ad id expedita cupiditate repellendus possimus unde?