shrx
  [email protected]      +91 7010252049

நடிகர் சிம்பு மீது ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்

நடிகர் சிம்பு மீது ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்
By: Kollywood Posted On: October 09, 2019 View: 11

நடிகர் சிம்பு மீது ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்

நடிகர் சிம்பு மீது ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்

10/9/2019 12:58:43 PM

படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு மீது பல தயாரிப்பாளர்கள் இதுவரை புகார் அளித்துள்ளனர். வாலு, கெட்டவன், மன்மதன், ஏஏஏ என்று பல படங்களில் சிம்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கன்னட படமான மப்டி படத்தை ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சிம்பு சரியாக படத்தின் ஷூட்டிங்கிற்கு வரவில்லை. இதனால் படத்தின் செலவு பெரிய அளவில் அதிகமாகி உள்ளது. இதனால் படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் காசு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். அதில் முதல் 10 நாட்கள் ஷூட்டிங்கே நடக்கவில்லை என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் அதிக அளவு செலவு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.

Read this on Kollywood Ad1
  Contact Us
  Mumin Media.

Chennai, Tamilnadu, India

Tel : +91 7010252049
Mail : [email protected]
Business Hours : 9:30 - 5:30

  Follow Us
Site Map
Get Site Map
  About

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Excepturi, dolores, quibusdam architecto voluptatem amet fugiat nesciunt placeat provident cumque accusamus itaque voluptate modi quidem dolore optio velit hic iusto vero praesentium repellat commodi ad id expedita cupiditate repellendus possimus unde?