shrx
  [email protected]      +91 7010252049

பிரேக் இல்லாத லாரி ஓட்டிய கார்த்தி

பிரேக் இல்லாத லாரி ஓட்டிய கார்த்தி
By: Kollywood Posted On: October 09, 2019 View: 11

பிரேக் இல்லாத லாரி ஓட்டிய கார்த்தி

பிரேக் இல்லாத லாரி ஓட்டிய கார்த்தி

10/9/2019 12:34:35 PM

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படம் கைதி. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். (இவர்தான் அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்குகிறார்). கைதி படத்தில் நடித்ததுபற்றி கார்த்தி கூறியதாவது: எதிர்பார்க்காத நேரத்தில் நல்ல படங்கள் எனக்கு அமைந்திருக்கிறது. அப்படித்தான் மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி ஆகிய படங்கள் வந்தன.

கைதி படம் பற்றி என்னிடம் லோகேஷ் கூறும்போது 10 வருடத்துக்கு பிறகு ஜெயிலிலிருந்து வெளியில் வரும் ஒருவனின் மனநிலையை பின்னணியாக கொண்டது என்றதுடன் ஒரே இரவில் நடப்பதுபோல் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது என்றார். கேட்கவே வித்தியாசமாக இருந்தது.

10 வருடமாக சிறையில் 4 சுவற்றுக்கு நடுவிலும், கைதிகளின் வெள்ளை உடை, போலீசாரின் காக்கி உடையை மட்டுமே பார்த்த கைதி வெளியில் வந்தால் அவனது மனநிலை எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கும் கதையாக இது இருக்கும். எனக்கு லாரி ஓட்ட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இந்த படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. எப்போதுமே லாரிகளில் சரியாக பிரேக் பிடிக்காது. அதுபோன்ற பிரேக் பிடிக்காத பழைய லாரி ஒன்றை ஓட்டி இப்படத்தில் நடித்திருக்கிறேன்.

முழுக்க இரவில் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. இதில் கதாநாயகி பாத்திரம் கிடையாது. பாடல்களும் இருக்காது. ஆனால் படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவு அமைத்திருக்கிறார். நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ். இசை அமைக்கின்றனர். கைதியில் நடித்தபோது நல்ல படத்தில் நடித்திருக்கிறோம் என்ற திருப்தி இருந்தது’ என்றார்.

Read this on Kollywood Ad1
  Contact Us
  Mumin Media.

Chennai, Tamilnadu, India

Tel : +91 7010252049
Mail : [email protected]
Business Hours : 9:30 - 5:30

  Follow Us
Site Map
Get Site Map
  About

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Excepturi, dolores, quibusdam architecto voluptatem amet fugiat nesciunt placeat provident cumque accusamus itaque voluptate modi quidem dolore optio velit hic iusto vero praesentium repellat commodi ad id expedita cupiditate repellendus possimus unde?