shrx
  [email protected]      +91 7010252049

அபராஜித், விஜய் ஷங்கர் விளாசல் தமிழகம் 7வது வெற்றி

அபராஜித், விஜய் ஷங்கர் விளாசல் தமிழகம் 7வது வெற்றி

அபராஜித், விஜய் ஷங்கர் விளாசல் தமிழகம் 7வது வெற்றி

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சி பிரிவில், தமிழக அணி தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம் - ரயில்வேஸ் அணிகள் மோதின. டாசில் வென்று பேட் செய்த ரயில்வேஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்தது. மணிஷ் ராவ் அதிகபட்சமாக 55 ரன் விளாசினார். பிரதம் சிங் 43, கேப்டன் கோஷ் 24, துருஷந்த் சோனி 20*, தேவ்தர் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.தமிழக அணி பந்துவீச்சில் அபராஜித் 4, எம்.அஷ்வின் 2, முகமது, நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 201 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தமிழகம், 44.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்து தொடர்ச்சியாக 7வது வெற்றியை வசப்படுத்தியது.

தொடக்க வீரர்கள் முரளி விஜய் 6, அபினவ் முகுந்த் 11 ரன்னில் வெளியேறிய நிலையில், அபராஜித் - விஜய் ஷங்கர் ஜோடி அபாரமாக விளையாடி ரன் குவித்தது. அபராஜித் 111 ரன் (124 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), விஜய் ஷங்கர் 72 ரன்னுடன் (113 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழக அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது.தமிழகம் 7 போட்டியில் 7 வெற்றியுடன் 28 புள்ளிகள் குவித்து சி பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. குஜராத் (6 போட்டியில் 24 புள்ளி), பெங்கால் (18), சர்வீசஸ் (16) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. தமிழக அணி எஞ்சியுள்ள 2 லீக் ஆட்டங்களில் 12ம் தேதி மத்தியப் பிரதேசத்தையும், 16ம் தேதி குஜராத் அணியையும் சந்திக்கிறது.

Read this on விளையாட்டு Ad1
  Contact Us
  Mumin Media.

Chennai, Tamilnadu, India

Tel : +91 7010252049
Mail : [email protected]
Business Hours : 9:30 - 5:30

  Follow Us
Site Map
Get Site Map
  About

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Excepturi, dolores, quibusdam architecto voluptatem amet fugiat nesciunt placeat provident cumque accusamus itaque voluptate modi quidem dolore optio velit hic iusto vero praesentium repellat commodi ad id expedita cupiditate repellendus possimus unde?